உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூர் வழியாக திருப்பதிக்கு பஸ்

அந்தியூர் வழியாக திருப்பதிக்கு பஸ்

அந்தியூர், அந்தியூர் தொகுதி மக்கள் நீண்ட காலமாக, அந்தியூர் வழியாக திருப்பதிக்கு அரசு பஸ் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில் திருப்பதிக்கு செல்லும் அதிவிரைவு சொகுசு பஸ் சேவை நேற்று தொடங்கியது. எம்.எல்.ஏ., வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். தினமும் மாலை, 6:30 மணிக்கு கோவையில் புறப்படும் இந்த பஸ், சத்தி, அத்தாணி வழியாக இரவு, 8:30 மணிக்கு அந்தியூர் வரும்.அந்தியூரிலிருந்து, 9:௦௦ மணிக்கு புறப்பட்டு, மேட்டூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார் வழியாக அதிகாலை, 5:30 மணிக்கு திருப்பதி சென்றடையும். இதேபோல் மறு மார்க்கத்தில், திருப்பதியில் இருந்து, இரவு 7:30 மணிக்கு புறப்படும் ஒரு பஸ், அந்தியூர் வழியாக கோவைக்கு செல்லும்.அந்தியூரிலிருந்து திருப்பதிக்கு கட்டணமாக, 455 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை