மரத்தில் பைக் மோதியதில் கேபிள் ஆப்பரேட்டர் பலி
சென்னிமலை, திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூரை அடுத்த மருதுறையை சேர்ந்தவர் செல்லத்துரை, 45; மேலப்பாளையம் ஸ்ரீவேலா கேபிள் நிறுவன ஆப்பரேட்டர்.ஈரோடு சென்று விட்டு சூப்பர் ஸ்பிளண்டர் பைக்கில் சென்னிமலைக்கு, நேற்று மதியம் திரும்பினார். வெள்ளோட்டை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியில், வளைவில் நிலை தடுமாறி சாலையோர மரத்தில் பைக் மோதியது. இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்தில் பலியானார். இறந்த செல்லத்துரைக்கு ரஞ்சிதா என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.