கேக்கில் வாசர்; அந்தியூரில் திடுக்
அந்தியூர்; அந்தியூரில் வாரச்சந்தை தெற்கு கேட் எதிரில் சத்தி ரோட்டில், ராஜா ஸ்வீட்ஸ் ஸ்டால் செயல்படுகிறது. அந்தியூரை சேர்ந்த சண்முகானந்தம், இந்த ஸ்வீட் ஸ்டாலில், நேற்று முன்தினம் கூடை கேக் எனப்படும், இரு கேக் வாங்கியுள்ளார். தனது மகனுக்கு நேற்று காலை ஒரு துண்டு கேக்கை தந்துள்ளார். கேக்கின் நடுவில் இரும்பு நட்டுடன் பயன்படுத்தும் வாசர் இருந்தது. அதை தந்தையிடம் காட்ட, கேக்கை அப்படியே எடுத்து சென்று கடை ஊழியர்களிடம் சண்முகானந்தம் முறையிட்டார்.ஆனால், அவர்களே உதாசீனப்படுத்தும் வகையில் பேசி அனுப்பியுள்ளனர். ஸ்வீட் கடை மீது உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், அவர் வலியுறுத்தியுள்ளார்.