உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேலை வாய்ப்பு பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

வேலை வாய்ப்பு பயிற்சி விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு, ஆதிதிராவிடர், பழங்குடியி மக்களுக்கு, சர்வதேச விமான போக்குவரத்து நிறுவனத்தால் வேலை வாய்ப்பு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க ஈரோடு கலெக்டர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: விமான நிலைய பயணிகள் சேவை அடிப்படை படிப்பு, சரக்கு ஏற்றுமதி-இறக்குமதி அடிப்படை படிப்பு, சுற்றுலா துறை அடிப்படை படிப்பு மற்றும் விமான பயண முன்பதிவு பயிற்சிகளுக்கு சான்றிதழ் வழங்கி வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 அல்லது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற, 18 வயது முதல் 23 வயது நிரம்பிய ஆதிதிராவிடர், பழங்குடியின சார்ந்தவர் விண்ணப்பிக்கலாம். பயிற்சி காலம், 6 மாதம். விடுதியில் தங்கி படிக்க வசதி, பயிற்சி செலவின தொகையாக, 95 ஆயிரம் ரூபாய் தாட்கோவால் வழங்கப்படும்.பயிற்சி முடித்து சான்றிதழ் பெறுவோர், தனியார் விமான நிறுவனம், நட்சத்திர விடுதி, சொகுசு கப்பல், சுற்றுலா துறையிலும் வேலை வாய்ப்பு பெறலாம். www.tahdco.comஎன்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் அல்லது 0424--2259453 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி