உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சமூக நலத்துறையில் பணி விண்ணப்பிக்க அழைப்பு

சமூக நலத்துறையில் பணி விண்ணப்பிக்க அழைப்பு

ஈரோடு, ஈரோடு மாவட்ட சமூக நலத்துறை அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள, மாவட்ட மகளிர் அதிகார மையத்தில் காலியாக உள்ள தகவல் தொழில் நுட்ப உதவியாளர், பல்நோக்கு உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட இணைய தள முகவரி erode.nic.inல் உரிய படிவம், தகுதி விபரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து, 'மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், 6 வது தளம் - பழைய கட்டடம், ஈரோடு-1' என்ற முகவரிக்கு வரும், 12ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் சமர்பிக்க வேண்டும்.தகவல் தொழில் நுட்ப பணியாளர் பணி, தகவல் தொழில் நுட்ப பணியாளர் - மிஷன் சக்தி திட்டப்பணிக்கு, 20,000 ரூபாய் ஊதியம். 35 வயதுக்கு உட்பட்ட கணினி, ஐ.டி., பாடப்பிரிவில் இளங்கலை படித்தவர் விண்ணப்பிக்கலாம். பல்நோக்கு உதவியாளர் பணிக்கு, 12,000 ரூபாய் ஊதியம். 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை