மேலும் செய்திகள்
ஜெருசலேம் புனித பயணம்: மானியம் பெற அழைப்பு
06-Oct-2026
ஈரோடு,:தமிழகத்தை சேர்ந்த பவுத்தர்கள், நாக்பூரில் விஜயதசமி அன்று நடக்கும் விழாவில் பங்கேற்க, 5,000 ரூபாய் வரை மானியம் வழங்கும் திட்டம் செயல்படுகிறது. இதில் பயணம் மேற்கொண்டு பயன் பெற விரும்புவோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கட்டணமின்றி விண்ணப்பத்தை பெறலாம். அல்லது, www.bcmbcmw.tn.gov.inஎன்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை வரும், 15க்குள் உரிய ஆவணங்களுடன், 'ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
06-Oct-2026