காளான் வளர்ப்பு இலவச பயிற்சிக்கு அழைப்பு
ஈரோடு:ஈரோடு அடுத்த சித்தோடு அரசினர் பொறியியல் கல்லுாரி சாலை, வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இங்கு ஆண், பெண் இரு பாலருக்குமான காளான் வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி வரும் அக்., 5 முதல், 15 வரை, 10 நாட்கள் வழங்கப்படுகிறது. பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். மாவட்டத்தை சேர்ந்த, 19 முதல், 49 வயதுக்கு உட்பட்டவர்கள் பயிற்சி பெறலாம். தகுதியானவர்கள், 0424 2400338, 87783 23213 என்ற எண்ணில் முன்பதிவு செய்து பயிற்சி பெறலாம்.