உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தென்னை கருந்தலை புழுவை கட்டுப்படுத்த பிரக்கானிட் ஒட்டுண்ணி வாங்க அழைப்பு

தென்னை கருந்தலை புழுவை கட்டுப்படுத்த பிரக்கானிட் ஒட்டுண்ணி வாங்க அழைப்பு

ஈரோடு, ஈரோடு மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் குரு சரஸ்வதி வெளியிட்ட அறிக்கை:ஈரோடு மாவட்டத்தில், காலநிலை மாற்றத்தால் கருந்தலை புழு தாக்குதல் அதிகமாக உள்ளது. கோபியில் தோட்டக்கலை துறையின் தென்னை ஒட்டுண்ணி மையத்தில், தென்னை மரங்களை தாக்கும் கருந்தலை புழுவை கட்டுப்படுத்த, பிரக்கானிட் ஒட்டுண்ணி உற்பத்தி செய்யப்படுகிறது. இப்புழு, தென்னை இலைகளின் அடிப்பாகத்தில் பச்சையத்தை சுரண்டி உண்பதால், கீழ் வரிசை ஓலைகள் காய்ந்திருக்கும். ஓலையின் அடிப்பகுதியில் மரத்துாள் போன்ற கூடு காணப்படும். இவ்வகை புழுக்கள், 10 முதல், 40 சதவீதம் வரை மகசூல் இழப்பை ஏற்படுத்தும். புழுவை கட்டுப்படுத்த, பிரக்கானிட் ஒட்டுண்ணிகளின் பயன்பாடு முக்கியம். ரசாயன மருந்து பயன்பாட்டை தவிர்க்கலாம். இவற்றை பயன்படுத்துவது எளிது. செலவும் குறைவு.விவசாயிகளுக்கு ஒரு பாக்கெட், 45 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. ஒரு ெஹக்டேருக்கு, 3 பாக்கெட்டுகள், பாதிப்பு அதிகம் இருந்தால், 15 நாட்கள் இடைவெளியில், 3 அல்லது, 5 முறை விட வேண்டும். பிரக்கானிட் ஒட்டுண்ணி தேவைப்படும் விவசாயிகள், பண்ணை மேலாளரை, 'தென்னை ஒட்டுண்ணி வளர்ப்பு நிலையம், அரசு மருத்துவமனை எதிரில், கோபி' என்ற முகவரியில் நேரில் அணுகி அல்லது 6381090244, 96005 83223 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை