மேலும் செய்திகள்
திருக்குறள் முற்றோதல் பயிலரங்கம்
19-Aug-2024
ஈரோடு: திருக்குறளில் உள்ள கருத்துக்களை பள்ளி மாணவ, மாணவியர் இளம் வயதில் அறிய, கல்வி அறிவுடன் நல்லொழுக்கம் ஏற்படுத்த தமிழக அரசு திருக்குறள் முற்றோதுதல் பாராட்டு பரிசு திட்டம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தில், 1,330 திருக்குறள்களையும், ஒப்புவிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு தலா, 15,000 ரூபாய் ரொக்கப்பரிசாக, தமிழ் வளர்ச்சி துறை ஆண்டு தோறும் வழங்குகிறது. இவ்வகையில் நடப்பு, 2024-25ம் ஆண்டுக்கான திருக்குறள் முற்றோதுதல் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. 1,330 குறளை ஒப்புவிக்கும் திறன் கொண்ட மாணவ, மாணவியர் தனது விண்ணப்பத்தை, பள்ளி தலைமை ஆசிரியரிடம் பெறலாம்.பூர்த்தி செய்த விண்ணப்ப படிவங்களை வரும், 31க்குள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துணை இயக்குனர் அலுவலகத்தில் வழங்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு, 95006 00212 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
19-Aug-2024