பொருளில்லா ரேஷன் கார்டாக மாற்றி கொள்ள அழைப்பு
ஈரோடு, ரேஷன் கடைகளில், அத்தியாவசிய பொருட்கள் பெறாத ரேஷன் கார்டுதாரர்கள், அத்தியாவசிய பொருட்கள் பெற விரும்பவில்லை எனில், உரிமத்தை விட்டு கொடுத்து பொருளில்லா அட்டையாக மாற்றி கொள்ளலாம் என, அரசு அறிவித்துள்ளது.மத்திய, மாநில அரசு உயர் அலுவலர்கள், தொழிலதிபர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், பெரு வணிகர்கள், நன்கு வசதி படைத்தோர் ரேஷனில் அத்தியாவசிய பொருட்கள் பெற விரும்பவில்லை எனில், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வலைதளம் www.tnpds.gov.in மூலம் ரேஷன் கார்டை, பொருளில்லா ரேஷன் கார்டாக மாற்றி கொள்ளலாம்.