உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நீதிமன்றத்தில் வழக்கால் நிலம் அளவீடு பணி ரத்து

நீதிமன்றத்தில் வழக்கால் நிலம் அளவீடு பணி ரத்து

அந்தியூர்: அந்தியூர் அருகே நகலுார் குண்டுமூப்பனுாரில், பஞ்., சார்பில் மின் கம்பம் அமைக்கப்பட்டது. பக்கத்து இடத்துக்காரர், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி., முத்துசாமி, அவரது குடும்பத்தினர் கம்பத்தை தோண்டி வீசினர். கம்பம் தனது நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள-தாக முத்துசாமி, வருவாய் துறையினரிடம் தெரிவித்தார். கடந்த மாதம் நில அளவீடு செய்து அத்துக்கல் நடப்பட்ட நிலையில் அதையும் முத்துசாமி அடித்து உடைத்தார். இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்து, போராட்டங்கள் நடத்தி,எஸ்.பி., அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.இந்நிலையில் அந்தியூர் தாசில்தார் கவியரசு தலைமையில், 30க்கு மேற்பட்ட போலீசார், வருவாய் துறையினர், சர்வேய-ருடன் நிலத்தை அளக்க நேற்று வந்தனர். இட பிரச்னை தொடர்-பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக, முத்துசாமி தரப்பினர்ஆவணங்களை காட்டினர். இதனால் அளவீடு செய்-யாமல், தாசில்தார் உள்ளிட்ட குழுவினர் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !