உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மெழுகுவர்த்தி ஏந்தி காங்., அஞ்சலி

மெழுகுவர்த்தி ஏந்தி காங்., அஞ்சலி

ஈரோடு:காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட, ௨௬ சுற்றுலா பயணிகளுக்கு, ஈரோடு மாநகர் மாவட்ட காங்., சார்பில், காந்தி சிலை முன் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி நேற்று செலுத்தினர். இதில் மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் ராஜப்பா, முன்னாள் மாவட்ட தலைவர் ரவி, மண்டல தலைவர் ஜாபர் சாதிக், திருச்செல்வம், அர்சத் உட்பட பலர் பங்கேற்றனர்.இதேபோல் சூரம்பட்டிவலசில், மா.கம்யூ., சார்பில், மாவட்ட செயலாளர் ரகுராமன் தலைமையில், அஞ்சலி செலுத்தப்பட்டது. தி.மு.க., சார்பில் சந்திரசேகர், ராமசந்திரன், நடராஜன், சி.ஐ.டி.யு., சார்பில் சுப்பிரமணி, விவசாயிகள் சங்கம் முனுசாமி உட்பட பல்வேறு அமைப்பினர் மவுன அஞ்சலி செலுத்தினர்.* நிருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், தாராபுரம் சர்ச் ரோட்டில், இருந்து, முன்னாள் எம்.எல்.ஏ., காளிமுத்து தலைமையிலான காங்., கட்சியினர், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் சென்றனர். காந்தி சிலை முன் நிறைவடைந்த ஊர்வலத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்., கட்சி நிர்வாகிகள் உடுமலை ஜனார்த்தனன், மாவட்ட துணை தலைவர் முத்துக்குமார், மடத்துக்குளம் ராஜேஷ்கண்ணன், ஹக்கீம், அசோக்குமார் உள்பட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ