மேலும் செய்திகள்
கஞ்சா கடத்தல் 2 வாலிபர்கள் கைது
21-Oct-2024
வாகன சோதனையில் சிக்கிய கஞ்சா; கடத்தி வந்தவர் கைதுபெருந்துறை, அக். 27-தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குற்றத்தடுப்பு பணிக்காக, பெருந்துறை எஸ்.ஐ.,க்கள் சகாதேவன், பாஸ்கரன், ராமசந்திரன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் பெருந்துறை அருகே திருவாச்சியில், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது வந்த காரில், சாக்கு மூட்டை இருந்தது. அவற்றை சோதனை செய்ததில், 20 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் வந்தவர் பவானியை அடுத்த பூலப்பாளையம், ஆலமரத்துவலசு, செட்டியார் தோட்டம் மணி, 40, என்பது தெரிந்தது. சிப்காட் பகுதிகளில் உள்ள வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்ததாக கூறினார். அவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் ஒருவரை தேடி வருவதாக தெரிவித்தனர். இருவர் மீதும் பவானி போலீஸ் ஸ்டேஷனில் ஏழு வழக்குகள், சித்தோடு போலீஸ் ஸ்டேஷனில் ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
21-Oct-2024