உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலை கோவிலில் தீப்பிடித்து எரிந்த கார்

மலை கோவிலில் தீப்பிடித்து எரிந்த கார்

ஈரோடு, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த காடப்பநல்லுாரை சேர்ந்த பத்மாவதி, உறவினர்கள் மூவருடன் ஈரோடு மாவட்டம் லக்காபுரத்தில் உள்ள செண்பகமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, டாடா இண்டிகா காரில் நேற்று மாலை வந்தார். பார்க்கிங் பகுதியில் நிறுத்தி விட்டு தரிசனத்துக்கு சென்றார்.இரவு, 8:10 மணியளவில் காரில் இருந்து கரும்புகை வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மொடக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் சென்றனர். அதற்குள் அங்கிருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பேட்டரி மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ