உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தீப்பிடித்து எரிந்த புதர் விபத்தில் சிக்கிய கார்

தீப்பிடித்து எரிந்த புதர் விபத்தில் சிக்கிய கார்

தாராபுரம்: தாராபுரத்தில் கரூர்-பழனி பைபாஸ் சாலையில், நேற்று மாலை, 4:30 மணியளவில் சாலையோர புதர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீயில் இருந்து கிளம்பிய புகை சாலையை மறைத்தது. இதனால் பைபாஸ் சாலையில் சென்ற வாகனங்கள் புகையில் சிக்கி தடுமாறியது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த அங்கமுத்து, 43, ஓட்டிச்சென்ற சிப்ட் கார், புகையில் சிக்கித் தடுமாறி, எதிரே முசிறியை சேர்ந்த மனோஜ், 25, ஓட்டி வந்த ஈச்சர் வேன் மீது மோதியது. அத்தோடு நிற்காமல் சாலையோர பள்ளத்தில் விழுந்தது. இந்நிலையில் தாராபுரம் நிலைய அலுவலர் ராஜா ஜெயசிம்மராவ் தலைமையிலான குழுவினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பள்ளத்தில் விழுந்த கார் கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டது. இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை