வார்டு செயலாளருக்கு மிரட்டல் தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
கோபி: வார்டு செயலாளருக்கு மிரட்டல் விடுத்த புகாரில், தி.மு.க., நிர்வாகி உட்பட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.கவுந்தப்பாடி அருகே சலங்கபாளையத்தை சேர்ந்தவர் தனசேகரன், 55; சலங்கபாளையம் டவுன் பஞ்., தி.மு.க., நான்காவது வார்டு கிளை செயலாளர்; சலங்கபாளையம் தி.மு.க., பேரூர் செயலாளர் பழனிச்சாமி மீது, கட்சி தலைமைக்கு புகார் அனுப்பியிருந்தாராம். இந்நிலையில் கடந்த மாதம், 28ம் தேதி இரவு, பழனிச்சாமி உட்பட ஆறு பேர், தன் வீட்டு முன் நின்று, தகாத வார்த்தை பேசி, இனி புகார் அனுப்பினால், வெளியே நடமாட முடியாமல் செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தாக, கவுந்தப்பாடி போலீசில் தனசேகரன் புகாரளித்துள்ளார். இதன்படி பழனிச்சாமி உட்பட ஆறு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.