எஸ்.பி.ஐ.. வங்கி கிளை மேலாளர் மீது வழக்கு
ஈரோடு, கரூர், மண்மங்கலம், நடாயனுார் கரைபள்ளத்தை சேர்ந்தவர் மணி, 68; சென்னையில் கூட்டுறவு பால் பண்ணை நடத்தி வருகிறார். கொடுமுடி பாரத ஸ்டேட் வங்கி கிளையில், 80 மாடுகளை வாங்கி வளர்க்க, 2012 மார்ச் மாதம் கடன் கேட்டிருந்தார்.கடனுதவி கொடுத்ததாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை தொகை வழங்கவில்லை. வங்கி கிளை மேலாளர் தவறான தகவலை தெரிவிக்கிறார் என்று கூறி, கொடுமுடி போலீசில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரித்த போலீசார், வங்கி கிளை மேலாளர் மீது, மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.