உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தற்செயல் விடுப்பு போராட்டம் மாநகராட்சி பணிகள் பாதிப்பு

தற்செயல் விடுப்பு போராட்டம் மாநகராட்சி பணிகள் பாதிப்பு

ஈரோடு: மாநகராட்சி பணியாளர்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், பணிகள் பாதிக்கப்பட்டன.தமிழகத்தில் உள்ள நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூ-தியம் வழங்க வேண்டும், மாநகராட்சிகளுக்கு தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும். அரசாணை 152 மற்றும் அரசாணை 10 ஆகி-யவற்றில் நீக்கப்பட்டுள்ள மாநகராட்சி, நகராட்சி பணியிடங்களை மீண்டும் அமைக்க வேண்டும், அவுட்சோர்சிங் முறையை முற்றி-லுமாக கைவிட வேண்டும் உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்-குழு வலியுத்தியது.இதற்காக கடந்த, 13ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், நேற்று தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநகராட்சி மற்றும் மண்டல அலுவலகங்களில் அதிகா-ரிகள் இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டன. பல்வேறு பணிக-ளுக்காக வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ