காவிரி குடிநீர் சப்ளை; சென்னிமலையில் கட்
சென்னிமலை: சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: சென்னிமலை பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கு காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது ஆற்றில் குடிநீர் எடுக்கும் இடத்தில் பராமரிப்பு பணி நடக்கிறது. வரும், 22ம் தேதி வரை நடக்கவுள்ளது.இதனால், ௨௨ம் தேதி வரை காவிரி குடிநீர் சென்னிமலைக்கு வராது. மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இதனால் ஒட்டங்குட்டை தண்ணீர் சப்ளை செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் லாரிகளில் குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.