சத்தி புலிகள் காப்பகத்தில் கணக்கெடுப்பு துவக்கம்
புன்செய்புளியம்பட்டி: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில், ஆண்டு-தோறும் புலிகள் கணக்கெடுப்பு மற்றும் விலங்குகள் கணக்கெ-டுப்பு நடப்பது வழக்கம். இதன்படி கணக்கெடுப்பு நேற்று தொடங்கியது.புலிகள் காப்பகத்தில் உள்ள, 10 வனச்சரகங்களில், 300க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், 76 குழுக்களாக பிரிந்து ஈடு-பட்டுள்ளனர். ஆறு நாட்கள் கணக்கெடுப்பு நடக்கிறது.இதில் முதல் மூன்று நாட்களுக்கு பெரிய தாவர உண்ணிகள் மற்றும் மாமிச உண்ணிகளின் தடயம் கணக்கெடுக்கப்படும்.அடுத்த மூன்று நாட்களுக்கு நேர்கோட்டு பாதையில் தாவர உண்ணிகள் அதாவது குளம்பின வனவிலங்குகள் கணக்கெடுப்பு நடக்கும். மொபைல் ஆப் மற்றும் அதிநவீன கருவிகள் மூலம் கணக்கெடுப்பு நடக்கிறது.