உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

ஈரோடு: ஈரோடு - கரூர் ரயில்வே பாதையில், கொடுமுடி ஸ்டேஷன் பகுதியில் பொறியியல் பணிகள் நடக்க உள்ளது. இதனால் நாளை மறுதினம் (9ம் தேதி), சில ரயில்களின் இயக்கம் ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, ரயில் எண்: 56809 - திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில், திருச்சியில் இருந்து காலை, 7:25 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை மட்டும் இயக்கப்படும். கரூர் - ஈரோடு இடையே இயக்கப்படாது. ரயில் எண்: 16846 - செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் இருந்து காலை, 5:20 மணிக்கு புறப்பட்டு கரூர் வரை இயக்கப்படும். ரயில் எண்: 16845 - ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோட்டில் இருந்து மதியம், 2:00 மணிக்கு புறப்படும். வரும், 9ல் மட்டும் கரூரில் மதியம், 3:05 மணிக்கு புறப்படும். ரயில் எண்: 16843 - திருச்சி - பாலக்காடு ரயில், திருச்சியில் மதியம், 1:00 மணிக்கு புறப்படும். கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை