மேலும் செய்திகள்
தாம்பரம் கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு
09-Oct-2024
சேலம்: ஆயுதபூஜை விடுமுறை கூட்ட நெரிசலை குறைக்க, சென்னை - கோட்டயம் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் - கோட்டயம் சிறப்பு ரயில், அக்., 10(இன்று), 12 இரவு, 11:55க்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியே மறுநாள் மதியம், 1:45க்கு கோட்டயத்தை அடையும். சேலத்துக்கு அதிகாலை, 5:12, ஈரோ-டுக்கு, 6:15க்கு வந்து செல்லும். மறுமார்க்க ரயில், அக்., 11(நாளை), 13 மாலை, 4:45க்கு கிளம்பி அடுத்தநாள் காலை, 8:20க்கு சென்னையை அடையும். ஈரோட்டுக்கு நள்ளிரவு, 12:45, சேலத்துக்கு, 1:47க்கு வந்து செல்லும். இந்த ரயிலில், 8 ஸ்லீப்பர் பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் இணைக்-கப்பட்டுள்ளன. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
09-Oct-2024