காங்கேயம் காளை சிலை அமைக்க சென்னிமலை தி.மு.க., சார்பில் நிதி
சென்னிமலை, காங்கேயம் காளையின் முழு உருவ வெண்கலச் சிலை, காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறுவப்பட உள்ளது. இந்நிலையில் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சருமான சாமிநாதன், ஈரோடு எம்.பி., பிரகாஷ் முன்னிலையில், சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், ௧.௫௦ லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.சென்னிமலை ஒன்றிய செயலாளர் பிரபு, ஒரு லட்சம் ரூபாய், சென்னிமலை கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பாக அமைப்பாளர் சதீஷ் என்கிற சுப்பிரமணியம், -50 ஆயிரம் ரூபாய் என, -1.50 லட்சம் ரூபாயை, காளை சிலை அமைப்பு சங்கத்தலைவர் கார்த்திகேயனிடம் வழங்கினர்.