செக்கு அமைக்க மானியம்
ஈரோடு, ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிவகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மாவட்டத்தில் தேசிய சமையல் எண்ணெய் இயக்க அறுவடைக்கு பிந்தைய மதிப்பு கூட்டு கட்டமைப்பு திட்டத்தில், 10 டன் திறன் கொண்ட எண்ணெய் செக்கு அமைக்க அரசு, தனியார், கூட்டுறவு, ஊழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு, 33 சதவீதம் அல்லது அதிகபட்சம், 9.90 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.இந்நிறுவனங்கள் சொந்த முதலீடு அல்லது வங்கி கடன் மூலம் இந்த அலகை அமைக்க வேண்டும். முறையாக நிறுவன சட்டத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும். கட்டடங்கள் தவிர எண்ணெய் பிரித்தெடுக்கும் உபகரணங்கள், இயந்திரங்களுக்கு மட்டுமே மானியம் பெற இயலும். கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிக அலுவலகத்தை, 0424-2903889 என்ற எண்ணில் அறியலாம்.