முதல்வர் ஹாக்கி போட்டி ஈரோடு அணிக்கு கோப்பை
முதல்வர் ஹாக்கி போட்டிஈரோடு அணிக்கு கோப்பை புன்செய்புளியம்பட்டி, அக். 12-மாநில அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி நடந்து வருகிறது. மாணவியர் ஹாக்கி இறுதிச்சுற்று போட்டி சென்னையில் நடந்தது. இதில் ஈரோடு மாவட்ட அணி முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணி வீராங்கனைகளுக்கு தலா, 75 ஆயிரம் ரூபாய் ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. ஈரோடு அணியில் இடம் பிடித்த அனைத்து மாணவியரும், புன்செய்புளியம்பட்டி கே.ஓ.எம்., அரசு மகளிர் பள்ளி மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவியர், பயிற்சியாளர் அருள்ராஜ் ஆகியோரை, தலைமை ஆசிரியர் உமாகவுரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.