குழந்தை தொழிலாளர் தின உறுதிமொழி
ஈரோடு, குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரத்துல்லா தலைமையில் உறுதிமொழி எடுத்து கெண்டனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின கையெழுத்து இயக்க பதாகையில் கையொப்பமிட்டனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜ், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.