உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிப்காட் நிலத்தடி நீர் பாதிப்பு தேசிய ஆய்வறிக்கையை வெளியிட கோரிக்கை

சிப்காட் நிலத்தடி நீர் பாதிப்பு தேசிய ஆய்வறிக்கையை வெளியிட கோரிக்கை

பெருந்துறை: தமிழக மாசு கட்டுப்பாடு வாரிய, ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர். சிப்காட்டில் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், சிப்காட் நிலத்தடி நீர் பாதிப்புகளை கண்டறிய நியமிக்கப்பட்ட தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கையை வெளியிடவும் வலியுறுத்தினர்.மேலும், சிப்காட்டில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும். சிப்காட் சுற்று வட்டார பகு-திகளில் நிலத்தடி நீரில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிய நியமிக்கப்பட்ட ஹைதராபாத் - தேசிய புவியியல் ஆராய்ச்சி நிறு-வனத்தின் ஆய்வறிக்கையை உடனடியாக பெற்று வெளியிட வேண்டும். சிப்காட் வளாகத்தில் காற்று மாசின் அளவை மக்கள் அறிந்து கொள்ள வசதியாக, இணைய வழி காற்று தர கண்கா-ணிப்பு மையங்களை கூடுதலாக அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை