உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு /  தேங்காய், கொப்பரை வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

 தேங்காய், கொப்பரை வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

ஈரோடு: விளைச்சல் அதிகரிப்பால் தேங்காய், கொப்பரை வரத்து அதிகரித்து, விலை குறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய் விலை, 60 -- 100 ரூபாய் குறைந்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலர் நல்லசாமி கூறியதாவது: கடந்த, 2023, 2024ல் மிக கடுமையாக கேரளா வாடல் நோய், ரூகோஸ் எனப்படும் வெள்ளை ஈ தாக்குதலால், தென்னையில் காய் பிடிப்பு குறைந்து வரத்து குறைந்தது. இதனால் ஒரு கிலோ தேங்காய், 8 முதல், 25 ரூபாய்க்குள் இருந்தது, கடந்த ஏப்., முதல் ஆக.,க்குள், 85 - 92 ரூபாயாக உயர்ந்தது. கொப்பரை கிலோ, 100 -- 120க்குள் பல ஆண்டாக இருந்தது. கடந்த ஜூலையில், 278 ரூபாய்க்கு உயர்ந்தது. தேங்காய் எண்ணெய் லிட்டர், 450 -- 480 ரூபாய்க்கு விற்பனையானது. அதேநேரம், 2024 ஆகஸ்டுக்கு பின் வெள்ளை ஈ தாக்குதல் படிப்படியாக குறைந்தது. அதன் எதிரொலியாக இரு மாதமாக காய் பிடிப்பு அதிகரித்து, காய் வரத்து உயர்ந்து, கிலோ தேங்காய், 40 -- 56 ரூபாய், கொப்பரை 190 -- 215 ரூபாய் என, குறைந்துள்ளது. தை மாதம் மேலும் குறைந்து, சித்திரை, வைகாசி மாதத்தில் தேங்காய், கொப்பரை வரத்து அதிகரிக்கும். தற்போது இருப்பில் உள்ள காய் வரத்தாகிறது. அப்போது புதிய கொப்பரை வந்தாலும், முன்பு போல கிலோ, 120 ரூபாய்க்கு வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம். தேங்காய் எண்ணெயும் தற்போது, 60 முதல், 100 ரூபாய்க்கு மேல் குறைந்து லிட்டர், 350 -- 380 ரூபாய்க்குள் வந்துள்ளது . இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை