தேங்காய் விலை வீழ்ச்சி
ஈரோடு:வளைகுடா போர் எதிரொலியால், ஏற்றுமதி தடைபட்டு, தேங்காய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், தென்னை விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உலக அளவில் தேங்காய் விளைச்சலில் இந்தியா முன்னணியில் உள்ளது. குறிப்பாக தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில் விளைச்சல் அதிகரிப்பாலும், மேற்காசிய போராலும் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த பிப்., வரை ஒரு டன் தேங்காய், 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது. தற்போது ஒரு டன், 38 ஆயிரம் ரூபாயாக சரிந்துள்ளது.தேங்காய் விவசாயிகள் கூறியதாவது: போரால் வளைகுடா நாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்ய முடியவில்லை. போக்குவரத்து வசதி இல்லாததால் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உள்ளூர் சந்தைகளில் தேங்காய் அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. இதன் காரணமாக விலை பாதியாக குறைந்துள்ளது. இவ்வாறு கூறினர்.