உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வளர்ச்சி திட்டப் பணிகளை கோபியில் கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்டப் பணிகளை கோபியில் கலெக்டர் ஆய்வு

வளர்ச்சி திட்டப் பணிகளைகோபியில் கலெக்டர் ஆய்வுகோபி, அக். 24-கோபியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று ஆய்வு செய்தார்.கோபி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஆய்வு செய்தார். அதையடுத்து, கோபி நகராட்சி சார்பில் கட்டப்படும் தினசரி அங்காடி, நுாலகம் மற்றும் அறிவுசார் மையம், லக்கம்பட்டி டவுன் பஞ்சாயத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, எஸ்.கணபதிபாளையத்தில் அங்கன்வாடி மையம், தாசம்பாளையத்தில் தனிநபர் குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க, அதன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கோபி சப் - கலெக்டர் சிவானந்தம், நகராட்சி சேர்மன் நாகராஜ், கமிஷனர் சுபாஷினி, பி.டி.ஓ.,க்கள் சக்திவேல், பிரேம்குமார் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை