உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கல்லுாரி, பள்ளிகளில் நடந்த புத்தக வாசிப்பு மாணவர்களுடன் கலெக்டர் பங்கேற்பு

கல்லுாரி, பள்ளிகளில் நடந்த புத்தக வாசிப்பு மாணவர்களுடன் கலெக்டர் பங்கேற்பு

ஈரோடு, ஈரோடு சிக்கய்ய அரசு கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில், ஈரோடு புத்தகத் திருவிழா நேற்று மாலை துவங்கியது. இதையொட்டி காலையில் கல்லுாரி வளாகத்தில் கல்லுாரி மாணவ, மாணவியர், பேராசிரியர், பிற பணியாளர்கள் விழிப்புணர்வுக்காக புத்தக வாசிப்பு இயக்கம் நடத்தினர்.தலைமை வகித்து கலெக்டர் கந்தசாமி பேசியதாவது: புத்தகம் வாசிப்பது மிகச்சிறந்த நுட்பம், நிதானம், அறிவு, அமைதியை தரும். புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்த தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுக்கு ஒரு முறை இதுபோன்ற புத்தகத்திருவிழா நடத்தப்படுகிறது. இங்கு, 21ம் ஆண்டு புத்தகத்திருவிழா நடப்பால், 21 நிமிடம் அனைவரும் வாசிப்போம் என்றார். இதை தொடர்ந்து, 21 நிமிடங்கள் அனைவரும் வாசித்து, நிறைவு செய்து, கைதட்டி உற்சாகப்படுத்தி கொண்டனர். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், கல்லுாரி முதல்வர் திருக்குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதேபோல் ஈரோடு சி.எஸ்.ஐ., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டல் அரசு மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புத்தக வாசிப்பு நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வுகளில் மாநகராட்சி கமிஷனர், டி.ஆர்.ஓ.,, - சி.இ.ஓ., மற்றும் ஆர்.டி.ஓ., பங்கேற்றனர்.* பவானிசாகர் வட்டாரத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் நேற்று காலை, 9:30 மணி அளவில் 21 நிமிடங்கள் புத்தக வாசிப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. பனையம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் தலைமையில், டி.எஸ்.பி., முத்தரசு, சுடர் அமைப்பின் இயக்குனர் நடராஜ் பங்கேற்றனர். சுடர் அமைப்பின் சார்பாக மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !