உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 45 அரங்குகளுடன் காலேஜ் பஜார் கண்காட்சி துவக்கம்

ஈரோட்டில் 45 அரங்குகளுடன் காலேஜ் பஜார் கண்காட்சி துவக்கம்

ஈரோடு, ஈரோடு, ரங்கம்பாளையம், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மகளிர் திட்டம் மூலம் மகளிர் குழு உற்பத்தி பொருட்களின் கண்காட்சி விற்பனை துவங்கியது.கலெக்டர் கந்தசாமி, கண்காட்சியை துவக்கி வைத்து கூறியதாவது: மகளிர் குழு உற்பத்தி பொருட்களை, மாணவர்கள் மத்தியில் கொண்டு சென்று பிரபலப்படுத்தும் வகையில், காலேஜ் பஜார் என்ற கல்லுாரி சந்தை கண்காட்சி மூன்று நாட்கள் நடத்தப்படுகிறது. இங்கு, 45 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மகளிர் குழுவினர் தயாரித்த கைவினை பொருட்கள், ஜமக்காளம், மண் பாண்டங்கள், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டு புடவைகள், துண்டு, ஆயத்த ஆடைகள், கால் மிதியடி, பேன்சி பொருட்கள், பேக், சணல் பை, மரச்செக்கு எண்ணெய், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட விளை பொருட்கள், மஞ்சள், குண்டு வெல்லம், நாட்டு சர்க்கரை போன்றவை விற்பனைக்கு உள்ளன. கல்லுாரி மாணவ, மாணவியர், பொதுமக்கள் பார்வையிட்டு, பொருட்களை வாங்கி செல்கின்றனர். இவ்வாறு கூறினார்.ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை