உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காலேஜ் பஜார் விற்பனை

காலேஜ் பஜார் விற்பனை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி, விற்பனை செய்ய இன்று முதல் 11ம் தேதி வரை, 3 நாட்கள், ரங்கம்பாளையத்தில் உள்ள ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 'கல்லுாரி சந்தை' எனப்படும் 'காலேஜ் பஜார்' நடக்கிறது.இதில் கைவினை பொருட்கள், மண் பாண்டங்கள், பவானி ஜமக்காளம், சென்னிமலை பெட்ஷீட், கைத்தறி சேலைகள், காட்டன் சேலைகள், பட்டுப்புடவைகள், துண்டுகள், ஆயத்த ஆடைகள், கால் மிதியடி, பேன்சி பொருட்கள், காட்டன் பை, சணல் பை, மரச்செக்கு எண்ணெய், மூங்கில் பொருட்கள், செயற்கை ஆபரணங்கள், பாக்குமட்டை பொருட்கள், சிறு தானியங்கள், சிறு தானிய உணவு பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை