உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆஸ்பெட்டாஸ் சீட் உடைந்துகல்லுாரி மாணவன் பலி

ஆஸ்பெட்டாஸ் சீட் உடைந்துகல்லுாரி மாணவன் பலி

கோபி:கவுந்தப்பாடி அருகே கந்தசாமியூரை சேர்ந்தவர் பிரதீப், 21; கோவை கற்பகம் பொறியியல் கல்லுாரி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மூன்றாமாண்டு மாணவர். விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். தந்தைக்கு சொந்தமான தறி குடோன் மேற்கூரையாக வேயப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் (சிமென்ட் அட்டை) விரிசல் விழுந்திருந்தது. அதை சரி செய்ய கடந்த, 16ம் தேதி மாலை கட்டடத்தின் மீது ஏறி ஆஸ்பட்டாஸ் சீட் மீது ஏறினார். அப்போது சீட் உடைந்து தறி மீது விழுந்தார். இதசில் தலையில் பலத்த காயமடைந்தார். நசியனுாரில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த பிரதீப் நேற்று இறந்தார். தந்தை வேலுச்சாமி புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !