உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சரக்கு வாகனம் மீது டூவீலர் மோதி விபத்து மூளை சிதறி கல்லுாரி மாணவர்கள் பலி

சரக்கு வாகனம் மீது டூவீலர் மோதி விபத்து மூளை சிதறி கல்லுாரி மாணவர்கள் பலி

திருச்செங்கோடு:திருச்செங்கோடு அருகே, சரக்கு வாகனம் மீது டூவீலர் மோதிய விபத்தில், கல்லுாரி மாணவர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.கரூர் மாவட்டம், பசுபதிபாளையத்தை சேர்ந்த கண்ணன் மகன் பாலாஜி, 19; வெங்கமேட்டை சேர்ந்த அத்தியப்பன் மகன் திருப்பதி, 19; நண்பர்களான இருவரும், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு-ஈரோடு சாலையில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லுாரியில், பி.சி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று காலை, இருவரும், 'சுசூகி அக்சஸ்' டூவீலரில் கல்லுாரிக்கு சென்றனர். செமஸ்டர் தேர்வு நடப்பதால் தேர்வை முடித்துவிட்டு, மாலை, 3:30 மணிக்கு, இருவரும் வீட்டுக்கு டூவீலரில் புறப்பட்டனர். டூவீலரை மாணவர் திருப்பதி ஓட்டினார். பாலாஜி பின்னால் அமர்ந்து சென்றார். பரமத்தி வேலுார் சாலை, காட்டுப்பாளையம் பிரிவு ரோடு அருகே சென்றுகொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த, 'டாடா பொலிரோ' சரக்கு வாகனத்தின் பக்கவாட்டு கொக்கியில் உரசியதில், இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்து சிறிது துாரம் சறுக்கியபடி சென்றனர். இதில், இருவரின் மண்டை உடைந்து மூளை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், மாணவர்கள் ஓட்டிவந்த டூவீலர் சுக்குநுாறாக உடைந்து நொறுங்கியது. திருச்செங்கோடு ரூரல் போலீசார், விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகன டிரைவர் ரமேஷ், 37, என்பவரை கைது செய்தனர். பலியான கல்லுாரி மாணவர்கள் இருவர் உடலை பார்த்து, சக மாணவர்கள் கதறி அழுத சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி