உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வணிக வரித்துறை அலுவலகம் திறப்பு

வணிக வரித்துறை அலுவலகம் திறப்பு

தாராபுரம், தாராபுரத்தில் பைபாஸ் சாலையில், ஐ.டி.ஐ.., சந்திப்பு அருகே, 2.53 கோடி ரூபாய் மதிப்பில், வணிகவரித்துறை மாநில வரி அலுவலர் அலுவலகம் கட்டப்பட்டது. இதை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சியில் நேற்று காலை திறந்து வைத்தார். புதிய அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் குத்து விளக்கேற்றினார். நிகழ்ச்சியில் திருப்பூர் வணிகவரி இணை ஆணையர் கார்த்திகேயனி, இணை ஆணையர் (நுண்ணறிவு) விமலா, கோட்ட துணை ஆணையர் மைதிலி மற்றும் மாநில வரி அலுவலர் தியாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள், நகரின் பிரபல வணிகர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை