உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கவுன்சிலர்களின் எச்சரிக்கை எதிரொலி மாநகராட்சி குப்பை கிடங்கில் கமிஷனர் ஆய்வு

கவுன்சிலர்களின் எச்சரிக்கை எதிரொலி மாநகராட்சி குப்பை கிடங்கில் கமிஷனர் ஆய்வு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில், 6-0 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை, வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் கொட்டப்படு-வதால், மலை போல் குவிந்துள்ளது.இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.எனவே குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று, நீண்டகாலமாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. ஆனாலும், வெண்டிபாளையத்திலேயே குப்பை குவிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் குப்பைக் கிடங்கை அகற்ற, மாநகராட்சி நிர்-வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால், கிடங்கின் நுழைவுவா-யிலை இழுத்து மூடி, மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுப-டுவோம் என்று, சமீபத்தில் நடந்த மாமன்ற கூட்டத்தில் கவுன்சி-லர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.இதன் எதிரொலியாக குப்பை கிடங்கில், மாநகராட்சி கமிஷனர் மணீஷ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் தலைமை பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அலுவலர் கார்த்திகேயன் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ