புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு: தி.மு.க., கவுன்சிலர் மீது புகார்
காங்கேயம், காங்கேயம் நகராட்சி, 18வது வார்டு தி.மு.க., கவுன்சிலரின் கணவர், அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். அதை அகற்ற வலியுறுத்தி, தாசில்தாரிடம் மனு தரப்பட்டது.இதுகுறித்து காங்கேயம் வேர்கள் அமைப்பை சேர்ந்த சங்கரகோபால், காங்கேயம் தாசில்தார் மேகனனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:காங்கேயம் நகராட்சி அகிலாண்டபுரத்தில் ரி.சா.எண் 1141/38ல் உள்ள அரசு புறம்போக்கு காலி இடத்தில், 18வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் வாணியின் கணவர் சிவகுமார் ஆக்கிரமித்து கட்டுமானம் செய்துள்ளார். இந்த இடம் சம்பந்தமாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஆக்கிரமிப்பு குறித்து வருவாய் துறையினர் விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை ஆய்வு செய்து, ஆக்கிரப்பு குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.