மேலும் செய்திகள்
வங்கதேச நபர்களுக்கு சிறை
05-Aug-2026
ஈரோடு:ஈரோடு மாவட்டம் அறச்சலுார் அட்டவனை அனுமன்பள்ளி அஞ்சுராம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி, 61; பொன்னாங்காட்டு தோட்டத்தில் இயங்கும் ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலே பார்த்தார்.கடந்த, 2025 பிப்., 9ம் தேதி நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார். வெட்டு காயம், கண்கள், முகம் சிதைந்து கிடந்தது. கொடூர ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரித்த அறச்சலுார் போலீசார், அதே நிறுவனத்தில் கட்டட வேலை செய்து வந்த அரியலுாரை சேர்ந்த செல்வம், 56, கைது செய்தனர். மது போதையில் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மத்திய சிறையில் சிறையில் அடைத்தனர்.இது தொடர்பான வழக்கு ஈரோடு இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கில் நீதிபதி சுரேஷ் நேற்று தீர்ப்பளித்தார். செல்வத்துக்கு ஆயுள் தண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல்கள் சதீஸ்குமார், மெய்யழகன் ஆஜராகினர்.
05-Aug-2026