உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரவில் யானை தாக்கி கட்டட தொழிலாளி பலி

இரவில் யானை தாக்கி கட்டட தொழிலாளி பலி

சத்தியமங்கலம்:கடம்பூர்மலையில் உள்ள இருட்டிபாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் பசுவராஜ், 40, கட்டட தொழிலாளி. வேலை முடிந்து பைக்கில் பசுவராஜ் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அவருடன் சிவக்குமார் என்பவர் வந்தார். அப்போது திடீரென வந்த ஒற்றை யானை தாக்கியதில், பசுவராஜ் சம்பவ இடத்தில் பலியானார். சிவக்குமார் ஓடிச் சென்றதால் உயிர் பிழைத்தார். இதுகுறித்து கடம்பூர் போலீசார், வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பலியான பசுவராஜிற்கு மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். சம்பவம் தொடர்பாக கடம்பூர் வனத்துறையினர், போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை