உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொடர் விடுமுறை: மாநகர சாலைகள் வெறிச்

தொடர் விடுமுறை: மாநகர சாலைகள் வெறிச்

ஈரோடு:ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகளான பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, மேட்டூர் ரோடு, சத்தி ரோடு உள்ளிட்ட பகுதிகள் மக்கள் கூட்டத்துடன், வாகன போக்குவரத்தும் எப்போதும் நிறைந்து காணப்படும். நேற்று ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, இன்று விஜயதசமி என தொடர் விடுமுறை நாட்களாக வருவதால், அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றுபவர்கள் வெளியூர்களுக்கும், சொந்த ஊர்களுக்கும் சென்றனர். இதனால் நேற்று வழக்கத்தை விட மாநகரின் முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது. அதேசமயம் உள்ளுர் வாசிகள் மட்டும் ஆயுத பூஜை பொருட்களை வாங்குவதற்காக, ஆர்.கே.வி ரோடு, கொங்கலம்மன் கோவில் வீதி ஒருசில பகுதிகளில் செயல்படும் கடைகளுக்கு வந்திருந்தனர். இருப்பினும் மதியத்திற்கு மேல் அனைவரும் அவரவர் வீடு, கடைகளில் பூஜைக்கு சென்றுவிட்டாதல், அதன் பின் மாநகர சாலைகள் அனைத்தும் வெறச்சோடி காணப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை