உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை

ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை

ஈரோடு ச ஈரோடு மாநகரில் நேற்று காலை 6:00 முதல் 8:00 மணி வரை துாறல் மழை பெய்தது. பின்னர் தொடர்ச்சியான குளிர் காற்றுடன் வானம் மந்தமாகவே இருந்தது. மதியம் கனமழை பெய்தது. மாலை 6:50க்கு மீண்டும் மிதமான வேகத்தில் மழை பெய்தது.* கோபி டவுன் பகுதியில் நேற்று அதிகாலை 4:00 மணி முதல், 6:00 மணி வரை சாரல் மழை பெய்தது. பின் காலை 10:00 முதல், கரட்டடிபாளையம், புதுவள்ளியாம்பாளையம், மூலவாய்க்கால், போடிசின்னாம்பாளையம், கோபிபாளையம், கோவை பிரிவு, கா.கணபதிபாளையம், காசிபாளையம், சிங்கிரிபாளையம், அக்கரை கொடிவேரி உள்ளிட்ட பகுதியில் மதியம் 12:00 மணி வரை, சாரல் மழை பெய்தபடி இருந்தது.* சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதியில் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை சாரல் மழை தொடர்ந்து பெய்தது. கடம்பூர், குன்றி மலை பகுதியில் பெய்த கன மழையால் குன்றி செல்லும் வழியில் உள்ள பள்ளங்கள், காட்டாறுகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்கனவே கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. வனத்துறையினர் சாலையை சீரமைக்க முன் வராததால், குன்றி மலை கிராம மக்கள் டிராக்டர் உதவியுடன் மாமரத்து பள்ளம், மாதேஸ்வரன் கோவில் பள்ளம் ஆகிய இடங்களை கற்களை கொண்டு சீரமைத்தனர்.* தாராபுரம் நகரில், நேற்று முன்தினம் இரவு லேசான துாரல் மழை பெய்தது. இரவு முழுதும் விட்டு விட்டு பெய்த மழை, காலையிலும் தொடர்ந்தது. பின்னர், சிறிது நேரம் வெயில் அடித்த நிலையில் மதியம், 3:30 மணியளவில், மீண்டும் மழை பெய்ய துவங்கியது. இரவு 8:30 மணி வரை விட்டு, விட்டு தொடர்ந்து நீடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ