உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா வழக்கில் ஓராண்டு கழித்து குற்றவாளி கைது

கஞ்சா வழக்கில் ஓராண்டு கழித்து குற்றவாளி கைது

பவானி, அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் எம்.ஜி.ஆர்.நகர் அருகில், கடந்த ஆண்டு ஜூலை மாதம், கஞ்சா விற்பனை நடப்பதாக அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சென்ற போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற சேலம் மாவட்டம் மேட்டூர், கருங்கல்லுார் அண்ணாதுரை, 44, என்பவரிடம், 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர்.இவ்வழக்கில் தொடர்புடைய அதே பகுதியை சேர்ந்த தங்கமணி, 48, என்பவரை ஓராண்டாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ