டூவீலர் மீது கார் மோதிசமையல் தொழிலாளி பலி
காங்கேயம்;வெள்ளகோவில் அருகே தாசவநாயகன்பட்டியை சேர்ந்தவர் ரவி, 55; சமையல் தொழில் செய்து வருகிறார். பேசன் புரோ பைக்கில் மகன் ராஜீவ் குமார், 30, உறவினர் மகன் சிவசக்தி, 25, ஆகியோரை பைக்கில் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு கம்பளியம்பட்டி- தாசவநாயக்கன்பட்டி ரோட்டில் நேற்று முன்தினம் மாலை ரவி சென்றார். சாலைப்புதுார் அருகே எதிரில் வந்த இனோவா கார் மோதியது.இதில் ரவி தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ரவி இறந்து விட்டது தெரிய வந்தது. மற்ற இருவரும் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.