மேலும் செய்திகள்
சிறப்பாக செயல்பட்ட சங்கங்களுக்கு பாராட்டு
08-Apr-2025
ஈரோடு:ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் கந்தராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:கூட்டுறவு துறை மானிய கோரிக்கை அறிவிப்பின்படி, ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து வகை கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான பணியாளர் நாள் நிகழ்வு நடக்க உள்ளது. வரும், 9 காலை, 10:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், பணியின்போது அல்லது வேறு வகையிலும் ஏற்பட்ட குறைகளை பகிர்ந்திடவும், அக்குறைகளை விதிகளுக்கு உட்பட்டு அல்லது வேறு வகையில் தீர்வு செய்யப்படும்.ஈரோடு மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலக கூட்ட அரங்கில் மண்டல இணை பதிவாளர் மற்றும் கூடுதல் பதிவாளர் தலைமையில் நடக்கும் நிகழ்வில், பணியாளர்கள் மனுக்களை வழங்கலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.
08-Apr-2025