உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் மரணம்

மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் மரணம்

ஈரோடு, ஈரோடு, இடையன்காட்டு வலசை சேர்ந்தவர் செந்தில்குமார், 50; தி.மு.க.,வை சேர்ந்தவர். கடந்த மாநகராட்சி தேர்தலில், 28வது வார்டு காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டு ராஜேஷ் ராஜப்பா நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று, பின் தி.மு.க.,வில் இணைந்தார். ஈரோடு அருகே கங்காபுரம் பகுதியில் வசித்து வந்தார். ஆறு மாதங்களுக்கு முன் இருதய அறுவை சிகிச்சை நடந்த நிலையில், சிகிச்சையை தொடர்ந்து வந்தார். நேற்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டு, கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாலை இறந்தார். மனைவி, ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை