உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டில் துாங்கிய மாநகராட்சி டிரைவர் சாவு

வீட்டில் துாங்கிய மாநகராட்சி டிரைவர் சாவு

பவானி, :பவானி அடுத்த சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 33. இவர் ஈரோடு மாநகராட்சியில், 1வது மண்டலத்தில், குப்பை அள்ளும் வண்டியின் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி காயத்திரி, 29. குழந்தைகள் இல்லை.நேற்று முன்தினம் இரவு, வீட்டில் மணிகண்டன் துாங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவில், உடலை அசைத்தபடி மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்தார். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக, ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர், அவரை பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை