மேலும் செய்திகள்
சிலிண்டர் வெடித்து குடிசை வீட்டில் தீ
24-Jan-2026
பவானி: குருவரெட்டியூர் அருகே ஏலுாரை சேர்ந்தவர் கிருஷ்ணன், 33; கூலி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். பெற்றோர் இல்லாத நிலையில் குடிசை வீட்டில் வசிக்கிறார். கிருஷ்ணன் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டில் இருந்து புகை வந்தது. சிறிது நேரத்தில் வீடு முற்றிலும் தீப்பற்றி எரிந்தது. அந்தியூர் தீய-ணைப்பு நிலைய வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்-களும் எரிந்து சாம்பலானது. விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Jan-2026