உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோபியில் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்: 2 பேர் மட்டுமே பங்கேற்பு

கோபியில் ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்: 2 பேர் மட்டுமே பங்கேற்பு

கோபி, கோபியில் நேற்று நடந்த, இடைநிலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில் இருவர் மட்டுமே பங்கேற்றனர்.கோபி, சத்தி, தாளவாடி, பவானிசாகர், அந்தியூர், நம்பியூர், டி.என்.,பாளையம் ஆகிய ஏழு யூனியன்களில், 545 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 760 இடைநிலை ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கான மாவட்டம் விட்டு, மாவட்டம் மாறும் ஆன்லைன் கவுன்சிலிங், கோபியில் கடந்த, 7ல் துவங்கியது. அப்போது பிற மாவட்டங்களுக்கு, விருப்பம் தெரிவித்த மூன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு, அந்த இடம் கிடைக்கவில்லை. அதையடுத்து நேற்று முன்தினம் நடந்த கவுன்சிலிங்கில், 27 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அந்த கவுன்சிலிங்கில், 10 பேர் பங்கேற்கவில்லை.எஞ்சிய, 17 இடைநிலை ஆசிரியர்களுக்கு, தாங்கள் விரும்பிய மாவட்டம் காலிப்பணியிடமாக கிடைக்கவில்லை. அதே வரிசையில் நேற்று நடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்க மொத்தம், 16 இடைநிலை ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் அவர்களில் இருவர் மட்டுமே பங்கேற்றனர். அதேசமயம் அந்த இருவருக்கும் தாங்கள் விரும்பிய மாவட்டம் கிடைக்கவில்லை. 14 பேர் பங்கேற்கவில்லை. பிற மாவட்டம் கிடைக்காத இடைநிலை ஆசிரியர்கள், மீண்டும் அதே பள்ளியில் தங்கள் பணியை தொடருவர் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை