உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி கட்டளை கதவணை தடுப்புச்சுவரில் விரிசல்

பவானி கட்டளை கதவணை தடுப்புச்சுவரில் விரிசல்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே, ஏழு இடங்களில் கதவணை மின் நிலையம் (பேரேஜ்) உள்ளது. இங்கு நீர் மின்னுற்பத்தி நடக்கிறது. காவிரி ஆற்றில் நேற்று, ௨௨ ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டிருந்த நிலையில், பவானி அருகே கட்டளை கதவணை பேரேஜில், இரண்டு மதகுகள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. காவிரி ஆற்றில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை பார்க்க ஏராளமான மக்கள் வருகின்றனர். இதில் இளைஞர், இளைஞிகள் ஆபத்தை உணராமல், பாலத்தின் மீதேறி செல்பி எடுப்பது, பக்கவாட்டு சுவரில் சாய்ந்து எட்டிப்பார்ப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடுகின்றனர். ஏற்கெனவே கதவணை பாலத்தின் தடுப்பு சுவரில் விரிசல் விழுந்து மோசமான நிலையில் உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போது, காவிரி ஆற்றில் தவறி விழும் அபாயமும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி